மத்திய அரசுக்கு தொடரும் நெருக்கடி

காலத்தின் கட்டாயமாகிவிட்ட கூட்டணி ஆட்சியானது ஒவ்வொரு பிரதமருக்கும் கத்தி முனையில் நடப்பது போலத்தான். ஆனால் கடந்தநாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியோ, அடுத்த மாதம்ஒரு வருடம் நிறைவடையும் நிலையில், கிட்டத்தட்ட ஒரு கட்சி ஆட்சியைப் போலவே இருந்து வந்தது. காரணம் காங்கிரஸ் கட்சி 207 இடங்களில் வெற்றி பெற்றதோடு, தேர்தலில் அதை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்டிரியஜனதாதளம் போன்ற கட்சிகள் தாமாகவே முன்வந்து வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்ததால் மத்திய அரசுக்கு 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது தான். இதன் விளைவாக மத்திய அரசின் உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவுஉள்ளிட்ட முக்கிய துறைகளை காங்கிரஸ் தன்வசமே வைத்துக் கொண்டது. கடந்த முறையைப் போல அல்லாமல், காங்கிரஸ் கட்சி கொடுத்ததுறைகளைக் கொண்டே கூட்டணிக் கட்சிகள் திருப்தியடைய வேண்டியதாயிற்று. ஆட்சியிலும் கூட்டணிக் கட்சிகளைக் கலந்தாலோசிக்காமல் காங்கிரஸ் தன்னிச்சையாகவே செயல்பட்டு வந்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த தேனிலவுக் காலம் நடந்து முடிந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரோடு முடிவடைந்துவிட்டது.

மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசுக்கு முதல் சோதனை மகளிர் இடஒதுக்கீடு மசோதா வடிவில் வந்தது. ஓட்டுகளைகவர்வதற்காக அரசியல் கட்சிகள் அவ்வப்போது கையில் எடுக்கும் ஆயுதமான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தானும் கையில் எடுத்து காங்கிரஸ் கட்சி தன் கையை தானே சுட்டுக் கொண்டது. ஏறத்தாழ 12 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை சில ஆதரவுக் கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையிலும், காங்கிரஸ் பிடிவாதமாக மாநிலங்களவையில் தாக்கல் செய்தது. இதனைக் கவுரவ பிரச்சினையாகவே கருதிய காங்கிரஸ் கட்சி, பிஜேபி மற்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன்மகளிர் மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றி, தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது. இருப்பினும் இதற்கான விலையாகசமாஜ்வாடி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் போன்ற கட்சிகளின் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரஸ் கட்சி இழக்க நேரிட்டது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜி, இந்த ஆண்டு இறுதியில் மேற்குவங்காளத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதைக் கருத்தில் கொண்டு, மகளிர் மசோதாவில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்குமாறு வலியுறுத்தினார். அதேநேரத்தில், மசோதாவில் திருத்தம் செய்தால் அதற்கு ஆதரவு தர மாட்டோம் என பிஜேபி கூறிவிட்டதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்வதில் இருந்து காங்கிரஸ் கட்சி பின்வாங்கிவிட்டது.

மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றுவதையே லட்சியமாகக் கொண்டுள்ள மம்தாவோ மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்வதே இல்லை. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சியைக் கண்டுகொள்வதே இல்லை. மம்தாவை முதலமைச்சர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சிஏற்றுக் கொண்டுவிட்டாலும¢, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் தனக்கு கவுரமான இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறது. சமீபத்தில் கொல்கத்தாவில் காங்கிரஸ்-திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் இரு கட்சிகளிடையே நீருபூத்த நெருப்பாக இருந்த மோதலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

மத்திய அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு தரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவு எதுவரை நீடிக்கும்என்பதை உறுதியாகக் கூற முடியாது. உத்தரபிரதேசத்தில் காங்கிரசை வலுப்படுத்த ராகுல்காந்தி எடுத்து வரும் முயற்சிகளால்மாயாவதி ஏற்கனவே எரிச்சலடைந்துள்ளார். இந்நிலையில் கன்ஷிராம், மாயாவதி உள்ளிட்டோருக்கு பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்ததோடு, அண்மையில் மாயாவதிக்கு பணமாலை போடப்பட்டவிவகாரத்தையும் ஊதிப் பெரிதாக்கி விட்டது. இதனால் உள்ளுக்குள்ளேயே புகைந்து கொண்டிருக்கும் மாயாவதி, தனக்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். தற்போது சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக்கொண்டுவிட்டதால், இனிமேல் மாயாவதி தனது திருவிளையாடலை ஆரம்பிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறாக நெருக்கடிகள் லேசாக துளிர்விட்ட நிலையில், ஐபிஎல் மோசடி விவகாரம் மத்திய அரசையே அசைத்துப்பார்த்துவிட்டது எனலாம். ஐபிஎல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிகளில் ஏற்படும் சுவாரசியமான திருப்பங்களைப் போல, ஐபிஎல் மோசடி விவகாரத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்திருந்தன. கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் தனக்கு தொடர்பே இல்லை என்று முதலில் மறுத்த வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசிதரூர், பின்னர் கேரளாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வேண்டும் என்ற ஆவலில் தான் கொச்சி அணியை ஏலம் எடுக்க உதவியதாக ஒத்துக்கொண்டார். சிக்கலில் இருந்து சசிதரூரைக் காப்பாற்றும் பொருட்டு அவரது தோழி சுனந்தா புஷ்கர், தான் இலவசமாக பெற்ற 70 கோடி ரூபாய் மதிப்புள்ள கொச்சி அணியின் பங்குகளை திரும்பக் கொடுக்க முன்வந்தார். இருப்பினும் பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைத் திருப்திப்படுத்த மத்திய அரசுசசிதரூரைக் காவு கொடுத்துவிட்டது. ஐபிஎல் விவகாரம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

தேசியவாதக் கட்சியின் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவார்மற்றும் அதே கட்சியைச் சேர்ந்த, விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரஃபுல் படேலுக்கும் ஐபிஎல் மோசடியில் தொடர்புஇருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சரத்பவாருக்கு தற்போதும் அங்கே செல்வாக்கு உண்டு. ஐபிஎல் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைகள் ஏலம் விடப்பட்டதில் சரத்பவாரின் பங்கு கணிசமாக இருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. அதேநேரத்தில், கொச்சி அணி ஏலம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் அமைச்சர் பிரஃபுல் படேலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதோடு, பயணிகள் விமான சேவைகளை நிறுத்திவிட்டு, ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு விமானங்களை இயக்குமாறு ஏர்இந்தியா நிறுவனத்தை அவரது மகள் பூர்ணா படேல் நிர்ப்பந்தித்ததாகவும் புகார் கூறப்படுகிறது.

இப்படி நெருக்கடிகள் அதிகரித்து வந்த நிலையில் தான், டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. மத்திய அமைச்சர்சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் ஆகியோரின் டெலிபோன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது காங்கிரஸ் கட்சியின் சர்வாதிகாரப் போக்கை காட்டுவதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இது நெருக்கடி கால இந்திராகாந்தி ஆட்சியை நினைவுபடுத்துவதாக குறை கூறியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் மோசடி, டெலிபோன் ஒட்டுக் கேட்பு விவகாரம் குறித்துஆய்வு செய்ய நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் எனறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனைக் கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க முடியாது என்று மறுத்துவிட்டது.

இவ்வாறான நெருக்கடிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல, எழுந்தது தான் நிதி மசோதா மீதான வெட்டுத் தீர்மானம். பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதைக் கண்டித்து இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், தெலுங்குதேசம், அதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் இணைந்து கொண்டு வந்த இந்த வெட்டுத் தீர்மானத்திற்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியும் ஆதரவு அளித்தது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஒத்த இந்த வெட்டுத் தீர்மானம் வெற்றி பெற்றால் மத்திய அரசு பதவி விலக நேரிடும். இந்த நெருக்கடியைத் தவிர்க்க மாயாவதி மீதான ஊழல் வழக்குகளில் அவருக்கு ஆதரவான நிலையை சிபிஐ எடுக்க வைத்ததன் மூலம், அதிருப்தியில் இருந்த மாயாவதியை காங்கிரஸ் கட்சி சமரசம் செய்தது. இதன் மூலம் நிதிமசோதா மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒத்துக் கொண்டதால், மத்திய அரசு ஒருவழியாகதப்பிவிட்டது.

கடந்த ஒரு ஆண்டு காலத்தில், பிற கட்சிகளை மதிக்காத காங்கிரசின் தன்னிச்சையான செயல்பாடு, நிதி மசோதா மீதான வெட்டுத்தீர்மானம் மூலம் பிஜேபி, இடதுசாரிகள் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டியுள்ளது. சில கூட்டணிக் கட்சிகளையும் எதிரிக் கட்சிகளாக்கிவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எந்த நிலையிலும் உறுதியான ஆதரவை அளிக்கும் கட்சியாக தற்போதைய நிலையில் திமுக மட்டுமே உள்ளது. தலைமுறை மாற்றத்திற்கு தயாராகி வரும் திமுக, இலாகா ஒதுக்கீடு, ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட எல்லா பிரச்சினைகளிலும் விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைபிடித்து, காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக சூழலைப் பராமரித்து வருகிறது.

நிதி மசோதா மீதான வெட்டுத்தீர்மானம் மூலம் பிஜேபியும், இடதுசாரிகளும் நெருங்கி வந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் மத்திய அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லையென்றாலும், இது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை மணி. இனிமேலும், காங்கிரஸ் கட்சியால் முன்பு போல் தன் விருப்பப்படி ஆடமுடியாது. ஏனெனில் இதற்கு மேலும் கூட்டணிக் கட்சிகளை இழக்க நேரிட்டால், ஆட்சியையே பறிகொடுக்கும் நிலை ஏற்படும் என்பதால் காங்கிரஸ் கட்சி எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு... உலக அழிவின் தொடக்கமா...

ஐரோப்பாக் கண்டத்தில் பிரிட்டனுக்கு அருகே வடஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவு ஐஸ்லாந்து. இது மலைகள், எரிமலைகள் மற்றும் பனிக்கட்டி ஆறுகள் நிரம்பிய நாடு. இங்கு அய்ஜா ஜலஜோகுல் என்ற பகுதியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த 15ம் தேதி திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் வெறும் சாம்பல் புகையை மட்டுமே கக்கிய இந்த எரிமலை, பின்னர் பேரிரைச்சலுடன் தீக்குழம்புகள் வெளியேறி வெள்ளம் போல ஓடத்தொடங்கியது. இதனால் எரிமலையைச் சுற்றிலும் இருந்த பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுத்தன. இதனால் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர நேர்ந்தது.
எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை சுமார் 55 ஆயிரம் அடி உயரத்திற்கு வான்வெளியில் வியாபித்துள்ளது. சுமார் 2500 கிமீ சுற்றளவில், பிரிட்டன், அயர்லாந்து பகுதிகளிலும் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. சாம்பல் புகை பரவியதால் அப்பகுதிகளில் வானம் கருமண்டலமானது. இந்த சாம்பல் மண்டலத்தில் நிறைந்துள்ள தூசி மற்றும் துகள்களால் விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு பெரும் விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.
உலகிலேயே கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அதிகமாக நடைபெறும் வட அமெரிக்கா-&ஐரோப்பா இடையேயான விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு விமானமும் இயக்கப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் எந்த ஒரு விமானமும் பிற நாடுகளுக்கு இயங்கவில்லை. எரிமலை வெடிப்பால் எழுந்துள்ள சாம்பல் புகையின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஏர்இந்தியா மற்றும் தனியார் நிறுவனங்களின் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் துண்டிக்கப்பட்டதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அதேநேரத்தில் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் நாடு திரும்ப முடியவில்லை. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள் தங்களின் பயணங்களை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. போலந்து அதிபரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மெர்கல் ஆகியோர் எரிமலை வெடிப்பால் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தனது பயணத்தை ரத்து செய்தனர். அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பிரிக் மாநாடுகளில் பங்கேற்ற நமது பிரதமர் மன்மோகன்சிங்கும் தனது பயணத்திட்டத்தை மாற்ற நேரிட்டது. முதலில் பிரேசிலில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு சென்று, அங்கிருந்து டெல்லி திரும்புவதாக இருந்த பிரதமரிர் மன்மோகன்சிங், பின்னர் பிரேசிலில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வழியாக டெல்லி திரும்பினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்து இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக விமான நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஜெர்மனி, ஹாலந்து நாடுகளில் ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்தாலும், பயணிகள் விமான சேவையைத் தொடங்க யாருக்கும் துணிவில்லை. மக்களின் உயிரோடு விளையாட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ள ஐரோப்பிய யூனியன், வான்வெளி முழுமையாக சீரடைந்த பிறகே விமான சேவை பழைய நிலையை அடையும் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு 2012-ல் உலகம் அழியப் போகிறயி என¢ற ப¦த¤ எழுந¢துள¢ளது. இந்த கருத்தை முதல¤ல¢ வெளியிட்டவர்கள் மாயன¢ இனத¢தவரே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் வாழ¢ந¢த இவர¢கள¢, கட்டிடக் கலை மற்றும் வானவியல் சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினர¢. ஆய¤ரம¢ ஆண¢டுகளுக¢கு முன¢பே சந¢த¤ரன¤ல¢ ஒரு ஆண¢டின¢ அளவு 329.53020 என¢று கண¤த¢துள¢ளனர¢. இது தற¢போதைய அற¤வ¤யல¢ கண¢டுப¤டிப¢புகள¤ன¢படி 34 வ¤னாடிகள¢ தான¢ மாறுபடுக¤றது.
இவர¢களது கணக¢குப¢படி சூர¤ய மண¢டலத¢த¤ற¢கு 26,625 ஆண¢டுகளாம¢. இவற¢றை 5,125 ஆண¢டுகள¢ வ¦தம¢ 5 யுகங¢களாகப¢ ப¤ர¤த¢த¤ருக¢கும¢ மாயன¢ இனத¢தவர¢ ஒவ¢வொரு யுகத¢த¤ன¢ முடிவ¤லும¢ உலகம¢ புதுப¢ப¤க¢கப¢படும¢ என¢று கூறுக¤றார¢கள¢. அதன¢படி, இப¢போது நாம¢ வாழும¢ 5வது யுகம¢ க¤மு 3114ம¢ ஆண¢டில¢ தொடங¢க¤யதாகவும¢, அந¢த யுகம¢ வரும¢ 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியோடு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அத்துடன் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகெங்கும் ஏற்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு வெளியான 2012 (ஹ¨ வில் சர்வைவ்?) என்ற ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது.
சரி, விஷயத்துக்கு வருவோம். 2012இல் உலகம் அழியும் என்பதற்கு மாயன்கள் கூறும் காரணம் என்ன? சூரியனின் கதிர்வீச்சில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களைக் காக்கும் புவியின் காந்த மண்டலத்தில் வரும் 2012ம் ஆண்டு துருவ மாற்றம் நிகழும். அதாவது வடதுருவம் தென்துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறும். இந்நிகழ்வின் போது புவியின் காந்தப்புலத்தில் தளர்வு ஏற்படும் இடங்களில் சூரியனின் கதிர்கள் நேரடியாக விழுவதால் அப்பகுதிகளில் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறும். இதனால் வெளிப்படும் சாம்பல் புகை சூரிய ஒளி பூமியில் விழுவதையே தடுத்து விடும். கடலில் மாபெரும் சுனாமிகள் ஏற்படும். பூமியில் தொடர்நது நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கூறியுள்ள மாயன்கள், இதனால் பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அழியும் என்றும், 2012ம் ஆண்டு புதிய யுகத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ளனர்.
தற்போதைய அறிவியல் விஞ்ஞானிகளும் புவியில் துருவமாற்றம் ஏற்படும் என்ற கருத்தை ஆமோதித்துள்ளனர். ஆனால் துருவமாற்றம் என்பது சட்டென்று நிகழக் கூடிய மாற்றம் அல்ல என்று கூறும் விஞ்ஞானிகள், துருவ மாற்றம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கக் கூடிய ஒரு தொடர் நிகழ்வு என்றும், இதனால் அழிவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தைரியம் ஊட்டியுள்ளனர். இதனிடையே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு நிற்பது குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியாத நிலையில், இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் வான்வெளியில் மேலும் பல மாதங்கள் நிலைத்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். மேலும¢, அய்ஜா ஜலஜோகுல் எர¤மலை வெடிப¢ப¤ன¢ தாக¢கத¢தால¢ அருகே உள¢ள காட¢லா என¢ற ம¤கப¢பெர¤ய எர¤மலையும¢ வெடிக¢க வாய¢ப¢புள¢ளதாக அவர¢கள¢ எச¢சர¤க¢கை வ¤டுத¢துள¢ளனர¢. இது ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல. உலகத்தையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அது சரி... அறிவியலில் மனிதன் எந்த அளவுக்கு முன்னேறினாலும் இயற்கையை வெற்றி கொள்ள முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இயற்கையின் செயலை யாராலும் உறுதியாகக் கூற முடியுமா? தோற¢றம¢ என¢ற ஒன¢று இருந¢தால¢ முடிவு என¢ற ஒன¢று இருந¢தே த¦ரும¢. ஆனால¢ அது எப¢படி, எப¢போது என¢றும¢ யாருக¢கும¢ தெர¤யாது. ஆகவே பழங¢கால கண¤ப¢புகளால¢ குழம¢பாமல¢, எத¤ர¢காலம¢ என¢பது நம¢ கைய¤ல¢ இல¢லை என¢பதை உணர¢ந¢து கைய¤ல¢ உள¢ள ந¤கழ¢காலத¢த¤ல¢ ச¤றப¢பாக செயல¢பட முயற¢ச¤ செய¢வோம¢. ஆகவே 2012க்குப் பின்னரும் உலகம் இயங்கும் என்று நம்புவோம்.