ஐரோப்பாக் கண்டத்தில் பிரிட்டனுக்கு அருகே வடஅட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு குட்டித் தீவு ஐஸ்லாந்து. இது மலைகள், எரிமலைகள் மற்றும் பனிக்கட்டி ஆறுகள் நிரம்பிய நாடு. இங்கு அய்ஜா ஜலஜோகுல் என்ற பகுதியில் உள்ள எரிமலை ஒன்று கடந்த 15ம் தேதி திடீரென வெடித்துச் சிதறியது. முதலில் வெறும் சாம்பல் புகையை மட்டுமே கக்கிய இந்த எரிமலை, பின்னர் பேரிரைச்சலுடன் தீக்குழம்புகள் வெளியேறி வெள்ளம் போல ஓடத்தொடங்கியது. இதனால் எரிமலையைச் சுற்றிலும் இருந்த பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுத்தன. இதனால் அப்பகுதியில் வசித்த ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர நேர்ந்தது.
எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் புகை சுமார் 55 ஆயிரம் அடி உயரத்திற்கு வான்வெளியில் வியாபித்துள்ளது. சுமார் 2500 கிமீ சுற்றளவில், பிரிட்டன், அயர்லாந்து பகுதிகளிலும் சாம்பல் புகை சூழ்ந்துள்ளது. சாம்பல் புகை பரவியதால் அப்பகுதிகளில் வானம் கருமண்டலமானது. இந்த சாம்பல் மண்டலத்தில் நிறைந்துள்ள தூசி மற்றும் துகள்களால் விமானங்களின் இன்ஜின்களுக்கு சேதம் ஏற்பட்டு பெரும் விபத்து நிகழும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்ததைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் விமான சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.
உலகிலேயே கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அதிகமாக நடைபெறும் வட அமெரிக்கா-&ஐரோப்பா இடையேயான விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. ஆசிய, ஆப்பிரிக்க, தென்அமெரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எந்த ஒரு விமானமும் இயக்கப்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் எந்த ஒரு விமானமும் பிற நாடுகளுக்கு இயங்கவில்லை. எரிமலை வெடிப்பால் எழுந்துள்ள சாம்பல் புகையின் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 24 ஆயிரம் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லி, மும்பை, சென்னை போன்ற இந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ஏர்இந்தியா மற்றும் தனியார் நிறுவனங்களின் விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. விமான சேவைகள் துண்டிக்கப்பட்டதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ள சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற முடியவில்லை. அதேநேரத்தில் பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளும் நாடு திரும்ப முடியவில்லை. விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதன் காரணமாக பல முக்கிய தலைவர்கள் தங்களின் பயணங்களை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. போலந்து அதிபரின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, ஜெர்மனியின் சான்சலர் ஏஞ்சலோ மெர்கல் ஆகியோர் எரிமலை வெடிப்பால் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் தனது பயணத்தை ரத்து செய்தனர். அணுசக்தி பாதுகாப்பு மற்றும் பிரிக் மாநாடுகளில் பங்கேற்ற நமது பிரதமர் மன்மோகன்சிங்கும் தனது பயணத்திட்டத்தை மாற்ற நேரிட்டது. முதலில் பிரேசிலில் இருந்து ஜெர்மனியின் பிராங்பர்ட்டுக்கு சென்று, அங்கிருந்து டெல்லி திரும்புவதாக இருந்த பிரதமரிர் மன்மோகன்சிங், பின்னர் பிரேசிலில் இருந்து தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வழியாக டெல்லி திரும்பினார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடுகளில் விமானப் போக்குவரத்து இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இதன் காரணமாக விமான நிறுவனங்களுக்கு நாள்தோறும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து ஜெர்மனி, ஹாலந்து நாடுகளில் ஆளில்லா விமானங்களைப் பறக்கவிட்டு வெற்றிகரமாக சோதனை செய்தாலும், பயணிகள் விமான சேவையைத் தொடங்க யாருக்கும் துணிவில்லை. மக்களின் உயிரோடு விளையாட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியுள்ள ஐரோப்பிய யூனியன், வான்வெளி முழுமையாக சீரடைந்த பிறகே விமான சேவை பழைய நிலையை அடையும் என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு 2012-ல் உலகம் அழியப் போகிறயி என¢ற ப¦த¤ எழுந¢துள¢ளது. இந்த கருத்தை முதல¤ல¢ வெளியிட்டவர்கள் மாயன¢ இனத¢தவரே. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வடஅமெரிக்காவின் மெக்சிகோ நாட்டில் வாழ¢ந¢த இவர¢கள¢, கட்டிடக் கலை மற்றும் வானவியல் சாஸ்திரங்களில் சிறந்து விளங்கினர¢. ஆய¤ரம¢ ஆண¢டுகளுக¢கு முன¢பே சந¢த¤ரன¤ல¢ ஒரு ஆண¢டின¢ அளவு 329.53020 என¢று கண¤த¢துள¢ளனர¢. இது தற¢போதைய அற¤வ¤யல¢ கண¢டுப¤டிப¢புகள¤ன¢படி 34 வ¤னாடிகள¢ தான¢ மாறுபடுக¤றது.
இவர¢களது கணக¢குப¢படி சூர¤ய மண¢டலத¢த¤ற¢கு 26,625 ஆண¢டுகளாம¢. இவற¢றை 5,125 ஆண¢டுகள¢ வ¦தம¢ 5 யுகங¢களாகப¢ ப¤ர¤த¢த¤ருக¢கும¢ மாயன¢ இனத¢தவர¢ ஒவ¢வொரு யுகத¢த¤ன¢ முடிவ¤லும¢ உலகம¢ புதுப¢ப¤க¢கப¢படும¢ என¢று கூறுக¤றார¢கள¢. அதன¢படி, இப¢போது நாம¢ வாழும¢ 5வது யுகம¢ க¤மு 3114ம¢ ஆண¢டில¢ தொடங¢க¤யதாகவும¢, அந¢த யுகம¢ வரும¢ 2012ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதியோடு முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து அத்துடன் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகெங்கும் ஏற்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு வெளியான 2012 (ஹ¨ வில் சர்வைவ்?) என்ற ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டது.
சரி, விஷயத்துக்கு வருவோம். 2012இல் உலகம் அழியும் என்பதற்கு மாயன்கள் கூறும் காரணம் என்ன? சூரியனின் கதிர்வீச்சில் இருந்து பூமியில் வாழும் உயிரினங்களைக் காக்கும் புவியின் காந்த மண்டலத்தில் வரும் 2012ம் ஆண்டு துருவ மாற்றம் நிகழும். அதாவது வடதுருவம் தென்துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறும். இந்நிகழ்வின் போது புவியின் காந்தப்புலத்தில் தளர்வு ஏற்படும் இடங்களில் சூரியனின் கதிர்கள் நேரடியாக விழுவதால் அப்பகுதிகளில் உள்ள எரிமலைகள் வெடித்துச் சிதறும். இதனால் வெளிப்படும் சாம்பல் புகை சூரிய ஒளி பூமியில் விழுவதையே தடுத்து விடும். கடலில் மாபெரும் சுனாமிகள் ஏற்படும். பூமியில் தொடர்நது நிலநடுக்கங்கள் ஏற்படும் என்று கூறியுள்ள மாயன்கள், இதனால் பூமியில் உள்ள உயிரினங்கள் அனைத்தும் அழியும் என்றும், 2012ம் ஆண்டு புதிய யுகத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ளனர்.
தற்போதைய அறிவியல் விஞ்ஞானிகளும் புவியில் துருவமாற்றம் ஏற்படும் என்ற கருத்தை ஆமோதித்துள்ளனர். ஆனால் துருவமாற்றம் என்பது சட்டென்று நிகழக் கூடிய மாற்றம் அல்ல என்று கூறும் விஞ்ஞானிகள், துருவ மாற்றம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக நீடிக்கக் கூடிய ஒரு தொடர் நிகழ்வு என்றும், இதனால் அழிவு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் தைரியம் ஊட்டியுள்ளனர். இதனிடையே ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு நிற்பது குறித்து எதுவும் உறுதியாகக் கூற முடியாத நிலையில், இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் வான்வெளியில் மேலும் பல மாதங்கள் நிலைத்திருக்கும் வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளனர். மேலும¢, அய்ஜா ஜலஜோகுல் எர¤மலை வெடிப¢ப¤ன¢ தாக¢கத¢தால¢ அருகே உள¢ள காட¢லா என¢ற ம¤கப¢பெர¤ய எர¤மலையும¢ வெடிக¢க வாய¢ப¢புள¢ளதாக அவர¢கள¢ எச¢சர¤க¢கை வ¤டுத¢துள¢ளனர¢. இது ஐரோப்பிய நாடுகளை மட்டுமல்ல. உலகத்தையே பீதியில் ஆழ்த்தியுள்ளது.
அது சரி... அறிவியலில் மனிதன் எந்த அளவுக்கு முன்னேறினாலும் இயற்கையை வெற்றி கொள்ள முடியாது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். இயற்கையின் செயலை யாராலும் உறுதியாகக் கூற முடியுமா? தோற¢றம¢ என¢ற ஒன¢று இருந¢தால¢ முடிவு என¢ற ஒன¢று இருந¢தே த¦ரும¢. ஆனால¢ அது எப¢படி, எப¢போது என¢றும¢ யாருக¢கும¢ தெர¤யாது. ஆகவே பழங¢கால கண¤ப¢புகளால¢ குழம¢பாமல¢, எத¤ர¢காலம¢ என¢பது நம¢ கைய¤ல¢ இல¢லை என¢பதை உணர¢ந¢து கைய¤ல¢ உள¢ள ந¤கழ¢காலத¢த¤ல¢ ச¤றப¢பாக செயல¢பட முயற¢ச¤ செய¢வோம¢. ஆகவே 2012க்குப் பின்னரும் உலகம் இயங்கும் என்று நம்புவோம்.
0 comments:
Post a Comment